பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்: பழனிவேல் தியாகராஜன் 

பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்: பழனிவேல் தியாகராஜன் 

தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை: தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* தமிழகத்தில் பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

* மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீரமட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 

* 200 குளங்களின் தர உயர்த்த ரூ.11.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ.6,607.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

* ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். 

* நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்.

* பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்.

* அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும். இதற்காக உலக வங்கி உதவி பெறப்படும்.

* பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

* காவிரி டெல்டாவில் பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் செயல்படுத்தப்படும்.

* நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்.

* கிராமங்களில் வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பை உறுதிப்படுத்த ரூ.2000 கோடி மதிப்பில் ஜல்ஜீவன் இயக்கம் அமைக்கப்படும். 

* 79,395 கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com