புதிய நியாயவிலைக்கடைகள் குறித்து ஆய்வு நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய நியாயவிலைக்கடைகள் குறித்து ஆய்வு நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும்: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: புதிய நியாயவிலைக்கடைகள் அமைக்கப்படும். புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

பொது விநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாயவிலைக்கடைகள் அமைக்கப்படும். 

புதிதாக நியாயவிலைக்கடைகள் அமைப்பது குறித்து ஆய்வுகள் நடத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* ரூ.9370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது.

* ரேசன் கடைகளில் பருப்பு, எண்ணெய் தொடர்ந்து வழங்கப்படும்.

* உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

விபத்துகளை தடுக்க, ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றியமைக்கப்படும்.

நீதித்துறைக்கு ரூ.1,713.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு காவல்துறைக்கு மொத்தம் ரூ.8,930.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பத்து ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும்.

மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீரமட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் மீனவர் நலனுக்காக ரூ.1,149 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும். 

காடுகளை மேம்படுத்த தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு உருவாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com