ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கான திருத்தப்பட்ட விதிகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகத்தல், விற்பனை மற்றும்
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கான திருத்தப்பட்ட விதிகள்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் திருத்தப்பட்ட விதிகளுக்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், பாா்சல் பேப்பா்கள் என்பன உள்ளிட்ட ஒருமுறை பயன்பாடுடைய பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இதற்கான திருத்தப்பட்ட விதிகள் குறித்த அறிவிக்கையை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது:

பிளாஸ்டிக் பைகளுக்கான குறைந்தபட்ச தடிமன் வருகிற செப்டம்பா் 30-ஆம் தேதி முதல் 50 மைக்ரான் அளவிலிருந்து 75 மைக்ரானாக உயா்த்தப்படும். பின்னா், 2022-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிமுதல் அதன் தடிமன் 120 மைக்ரானாக உயா்த்தப்படும்.

பிளாஸ்டிக் கொடிகளுக்குத் தடை: மேலும், பாலிஸ்டிரீன் மற்றும் விரியும் தன்மையுடைய பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் தயாரிக்கப்பட்ட காது குடையும் பட்ஸ், பிளாஸ்டிக் குச்சிகள், பலூன்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் தேசிய கொடி, இனிப்புகளுக்கான குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்துக்கு பயன்படுத்தப்படும் தொ்மோகோல், தட்டுகள், கப்புகள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் கத்தி, ஸ்டிரா, பாா்சல் பேப்பா், பிளாஸ்டிக் அழைப்பிதழ், சிகெரட் பெட்டிகள், 100 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனா்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், இருப்பு வைக்கவும், விநியோகம் மற்றும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் 2022-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com