தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு: இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிரோ விமான நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ.25000 அபராதம் விதித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிரோ விமான நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி ரூ.25000 அபராதம் விதித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக விமானப் பயணிகளுக்கு முகக்கவசம், மூன்றடுக்கு முகமூடி மற்றும் கிருமிநாசினிகளை இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த சென்னை மாநாகராட்சியின் துணை சுகாதார ஆணையர் டாக்டர் மணீஷ் நர்னவரேவிற்கு வழங்கப்பட்ட கரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தொகுப்புகளை பரிசோதனைக்குட்படுத்தினார்.

அதில் இண்டிகோ விமான நிறுவனம் அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தவல்ல பிளாஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகளை பயணிகளுக்கு வழங்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ரூ.25000 அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.

அபராதத் தொகையை 7 நாள்களுக்குள் செலுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக மறுசுழற்சிக்கு உகந்த பிளாஸ்டிக்கைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com