கொங்கணாபுரம் பகுதியில் கனமழை:  மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஓமலூர் சங்ககிரி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையிலான வருவாய்த் துறையினர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையிலான வருவாய்த் துறையினர்.


எடப்பாடி: சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், ஓமலூர் சங்ககிரி மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள கச்சிராயன் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. 

இந்நிலையில், ஏரியின் கரைப் பகுதியில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மழை நீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், சங்ககிரி - ஓமலூர் இடையிலான சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த சாலை வழியாக விரும் வாகனங்கள் மகுடஞ்சாவடி வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட பகுதியில் சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் தலைமையிலான வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com