‘தேர்தலை கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்’: பஞ்சாப் முதல்வர்

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தேர்தலை கருத்தில் கொண்டு தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக பஞ்பாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்
பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங்


நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், தேர்தலை கருத்தில் கொண்டு தென் மாநிலங்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாக பஞ்பாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

இந்நிலையில் நிதிநிலை அறிக்கை குறித்து பஞ்சாப் முதல்வர் கூறியதாவது,

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் எல்லைகளில் பிரச்னைகள் அதிகரித்து வரும் சூழலில், பாதுகாப்புத் துறைக்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை. அதே நேரத்தில் கரோனா நெருக்கடி சூழலில் சுகாதாரத்துறைக்கும் குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மற்றும் மற்ற வட மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் போதுமான திட்டங்கள் ஒதுக்கப்படவில்லை. மேற்குவங்கம் மற்றும் தென் மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com