ராஜஸ்தானில் 7,294 பறவைகள் பலி

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,294 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் 7,294 பறவைகள் பலி
ராஜஸ்தானில் 7,294 பறவைகள் பலி

ராஜஸ்தானில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 7,294 பறவைகள் உயிரிழந்துள்ளதாக மாநில கால்நடைத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

ஹரியாணா, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

இதனையடுத்து ராஜஸ்தான் மாநிலத்திலும் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மாநில கால்நடைத்துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தியில்,

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2020 டிசம்பர் 25 முதல் 2021 பிப்ரவரி 1 வரை 7,294 பறவைகள் உயிரிழந்துள்ளன. இறந்த பறவைகளில் 5,023 காகங்கள், 440 மயில்கள், 692 புறாக்கள் மற்றும் 1,139 மற்ற வகை பறவைகள் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com