25 நாள் இடைவெளியில் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள்

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவில் இருந்து 25 நாள்கள் இடைவெளியில் வெளியாக உள்ளது.
25 நாள் இடைவெளியில் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள்
25 நாள் இடைவெளியில் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகள்

தமிழகத்தின் தேர்தல் முடிவுகள் வாக்குப்பதிவில் இருந்து 25 நாள்கள் இடைவெளியில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெற உள்ளது. 

தேர்தல் ஆணையர் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவுகளை வாக்குப்பதிவிலிருந்து 10 நாள்களுக்குள்ளாக அறிவிக்கக் கோரியிருந்த நிலையில் தற்போது 25 நாள்கள் கழித்து முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பின் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளால் அரசியல் கட்சிகளிடையே பரபரப்பு கூடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com