களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது.
களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு
களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4 மணியுடன் நிறைவு பெற்றது.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் விழாவின் ஒரு பகுதியான உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று (வியாழக்கிழமை) காலை 8.10 மணியளவில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, திருப்பரங்குன்றம் எம்எல்ஏ சரவணன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் பாலகுருநாதர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று கோயில் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்றனர்.

மொத்தம் 8 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 523 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் காளைகளும் பங்குபெற்றன.

வெற்றி பெறும் வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. 26 காளைகளை அடக்கிய திருநாவுக்கரசு மற்றும் விஜய் ஆகிய இருவர் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com