நாட்டில் இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரத்துறை

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 35 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 306 -க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை 35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன


தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 35 கோடியே 12 லட்சத்து 21 ஆயிரத்து 306 -க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி,  நாடு முழுவதும் 46,04,925 முகாம்களின் மூலம் இதுவரை மொத்தம் 35,12,21,306- க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63,87,849 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முன்களப் பணியாளர்கள் பிரிவில் 1,75,81,755 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 96,55,149 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

18-44 வயது பிரிவில் 9,98,28,219 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 27,26,338 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

45-59 வயது பிரிவில் 9,05,89,022 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 1,86,76,107 யனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

60 வயதுக்கும் மேற்பட்டோர் பிரிவில் 6,89,10,208 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 2,57,17,583 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

மூன்றாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதில் இருந்து 37 மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 3,58,49,328 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 4,84,740 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர். 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, பிகார், குஜராத், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய எட்டு மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் 50 கோடிக்கணக்கான பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், ஆந்திரம், அசாம், சத்தீஸ்கர், தில்லி, ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை  மாநிலங்களில் 18-44 வயது பிரிவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் 20,07,665 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,265 பயனாளிகள் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.  புதுச்சேரியில் 50,340 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் 146-ஆவது நாளில், 30,32,675 பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 27,33,087 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 2,99,588 பயனாளிகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியை பெற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com