உலகையே அச்சுறுத்தும் கரோனா: தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18.97 கோடியைக் கடந்தது

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.97 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,83,139-ஆக உயர்ந்துள்ளது.  
உலகையே அச்சுறுத்தும் கரோனா: தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18.97 கோடியைக் கடந்தது


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பெருந்தொற்றுக்கு உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18.97 கோடியைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,83,139-ஆக உயர்ந்துள்ளது.  

உலகில் பெரும்பாலான நாடுகளில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், பெரும்பாலான நாடுகள் தற்போது தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. தொற்று பாதிப்பைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், டெல்டா வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், கரோனா மூன்றாம் அலை பாதிப்பின் ஆரம்ப நிலையை உலகம் சந்திக்கத் தொடங்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் அதிகரித்திருப்பதன் மூலம், கடந்த சில மாதங்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் குறைந்துவந்த நிலையில், கரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன. சீராக குறைந்துவந்த இந்த பாதிப்பு 10 வாரங்களுக்குப் பிறகு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

டெல்டா வகை கரோனா பரவலுடன், பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்வு, சீரற்ற பொதுசுகாதார நடவடிக்கைகளுமே இதற்கு காரணங்களாக பாா்க்கப்படுகிறது. டெல்டா வகை கரோனா இப்போது 111-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்த வகை கரோனா விரைவில் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இத்தகையச் சூழலில், உலக அளவிலான தடுப்பூசி விநியோகத்திலும், உயிா் காக்கும் மருந்துகள் பயன்பாட்டிலும் அதிா்ச்சியளிக்கக் கூடிய வகையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருவதை கரோனாவுக்கான சா்வதேச அவசரக் குழு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த ஏற்றத்தாழ்வு இரு வகை அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது. அதாவது, தடுப்பூசி அதிக பயன்பாடுள்ள நாடுகள், கட்டுப்பாடுகளை முழுமையாக தளா்த்தி பொருளாதார நடவடிக்கைகளை அனுமதித்திருப்பது முதல் வகை அச்சுறுத்தல். இரண்டாவது, கரோனா தடுப்பூசி போதிய அளவில் கிடைக்காமல் நாடுகள் சந்திக்கும் அச்சுறுத்தல். பல நாடுகளுக்கு எந்தவித தடுப்பூசியும் இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இரு தினங்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 18,97,36,093 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40,83,139 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 17,31,48,004 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 1,25,04,950 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 79,335 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,10,25,875-ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 4,12,563 -ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 3,01,76,306 பேர் மீண்டுள்ளனர்.

கரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 34,887,155 -ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்‍கை 624,214-ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 2,93,41,913 பேர் மீண்டுள்ளனர்.

இதேபோல், பிரேசில், இந்தியா,பிரான்ஸ், ரஷ்யா, துருக்‍கி, இங்கிலாந்து, அர்ஜென்டினா, கொலம்பியா, ஸ்பெயின், இத்தாலி  உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com