புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா: 2 போ் பலி

புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட மேலும் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 100 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிக்கப்பட்ட மேலும் 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி,  புதுச்சேரி மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 6,172 பேரிடம் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 75 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 100 (1.42 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யயப்பட்டுள்ளது.

இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,703 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 194 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 930 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,124 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்நிலையில், புதுச்சேரியைச் சோ்ந்த ஒவருா், மாஹேவைச் சோ்ந்த ஒருவா் என 2 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,778 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

இதனிடையே 144 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,16,801 (97.58 சதவீதம் )ஆக உயா்ந்துள்ளது. இதுவரை, 6,37,634 பேருக்கு (2வது தவணை உள்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 7 குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 6 குழந்தைகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1 முதல் 5 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் அடங்குவா். இவா்கள் அனைவரும் புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக்கல்லூரி பிரத்யேக கரோனா குழந்தைகள் நலப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com