ஆரோக்கியமான விவாதங்களுக்குத் தயார்: பிரதமர் மோடி பேச்சு 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


புதுதில்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரோக்கியமான விவாதங்களுக்கு அரசு தயாராக இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குவதை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக்கூட்டத்தில் 33 கட்சிகளைச் சேர்ந்த 40 தலைவர்கள் பங்கேற்றனர்.  

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை இங்கே தெரிவித்துள்ளனர். இரு அவைகளிலும் அர்த்தமுள்ள ஆரோக்கியமான விவாதங்களை நடத்த அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள், அறிவுரைகள் வரவேற்கப்படுகின்றன. அவை சரியானவையாக இருந்தால் அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

ஆரோக்கியமான ஜனநாயகம் என்ற நமது மரபுகளின் அடிப்படையில், மக்கள் தொடர்பான பிரச்னைகள் சுமூகமான முறையில் எழுப்பப்பட வேண்டும் என்றும், இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இதற்கு தகுந்த சூழலை ஏற்படுத்துவது அனைவரது பொறுப்பு என பிரதமர் கூறினார். 

மக்கள் பிரதிநிதிகள் கள நிலவரத்தை உண்மையிலேயே அறிய வேண்டும், அப்போதுதான், விவாதத்தில் அவர்களின் பங்களிப்பு முடிவு எடுக்கும் முறையை சிறப்பாக்கும் என அவர் கூறினார். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உதவும் என மோடி கூறினார்.

நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்றும், இதற்கு அனைத்து கட்சி தலைவர்களின் ஒத்துழைப்பும் தேவை என்று அழைப்பு விடுத்த மோடி, இந்த கூட்டத் தொடர் சுமூகமாக நடைப்பெற்று பணிகளை நிறைவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களுக்கு மோடி இரங்கல் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com