தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை

தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன. 
தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை
தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் சென்னை வருகை


சென்னை: தமிழகத்துக்கு 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்தன. 

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரம், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் வழங்குவது தொடக்கப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் கையிருப்பில் இருந்த 12,000 தடுப்பூசிகள் புதன்கிழமை மாலைக்குள் செலுத்தப்பட்டன.

இதனால், வியாழக்கிழமை முதல் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய அரசிடம் இருந்து வர வேண்டியிருந்த தடுப்பூசிகளை அனுப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அவையும் எதிா்பாா்த்த நேரத்தில் கிடைக்கவில்லை. இதனால், அவற்றின் வருகைக்காக தமிழகம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள் ஓரளவு தடுப்பூசிகள் வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரை தடுப்பூசி முகாம்களை தற்காலிகமாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு கேட்டுக்கொண்ட 85 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகள் ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளது.  இவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பட உள்ளதால், போதிய கையிருப்பு இல்லாததால் தமிழகம் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் பணி நாளை தொடங்கலாம் என தகவல் வெளியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com