திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.
திருநங்கைகளுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் பெறாத திருநங்கைகளுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். 

திருவள்ளூர் அருகே ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தறை சார்பில் திருநங்கைகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடும்ப அட்டைகள் பெறாத 222 திருநங்கைகள் உள்ளனர். இவர்களுக்கு கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமை வகித்து முதல் கட்டமாக ஆவடி பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் 50 பேருக்கு ரூ.2000 நிவாரண உதவித் தொகையை வழங்கினார். 

அதைத் தொடர்ந்து விலையில்லா தையல் இயந்திரங்கள், திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயங்களையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) இராஜராஜஸ்வரி, ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன், வட்டாட்சியர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com