நாட்டில் இதுவரை 24.58 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடியே 58 லட்சத்து 47 ஆயிரத்து 212 -க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை 24.58 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன
நாட்டில் இதுவரை 24.58 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

தேசிய அளவிலான தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இதுவரை 24 கோடியே 58 லட்சத்து 47 ஆயிரத்து 212 -க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இதுவரை மொத்தம் 24,58,47,212 க்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

18-44 வயது பிரிவில் 18,64,234 பயனாளிகள் தங்களது முதல் டோஸ் தடுப்பூசியையும், 77,136 பயனாளிகள் தங்களது இரண்டாவது டோசையும் பெற்றுள்ளனர். மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கல் தொடங்கியதில் இருந்து 37 மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 3,58,49,328 பேர் முதல் டோசையும், 4,84,740 பேர் இரண்டாம் டோசையும் பெற்றுள்ளனர்.

பிகார், தில்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 18-44 வயது பிரிவில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் மட்டும் 20,07,665 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும், 5,265 பேருக்கு இரண்டாம் டோசையும் செலுத்தப்பட்டுள்ளது.  புதுச்சேரியில் 50,340 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையின் 146-வது நாளில், 30,32,675 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 27,33,087 பேருக்கு முதல் டோஸ், 2,99,588 நபர்களுக்கு இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com