கணவருக்காக மது பாட்டில்கள் வாங்கிச் சென்ற மூதாட்டி!

கம்பம் கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றார் வயதான பெண்மணி ஒருவர்.
கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் வயதான பெண்மணி.
கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் வயதான பெண்மணி.

கம்பம்:  கம்பம் கூடலூரில் கணவருக்காக மதுக் கடையில் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் சென்றார் வயதான பெண்மணி ஒருவர்.

தேனி மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளான கம்பம் கூடலூரில் பொது முடக்கத் தளர்வுகள் காரணமாக மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

கூடலூர் பிரதான வீதியில் இரண்டு இளைஞர்கள் திங்கள் கிழமை இரண்டு குதிரைகளில் சவாரி செய்து நகர்வலம் வந்தனர். 

குதிரை சவாரி செய்த இளைஞர்கள் இரண்டு பேரும் முகக்கவசம் அணிய வில்லை, இதனால் ரோந்து வந்த போலீசார் அவர்களை நிறுத்தி முகக்கவசம் அணிய அறிவுறுத்தினர், பின்னர் குதிரைகளை அவர்களது இருப்பிடத்திற்கு ஓட்டிச் செல்லுமாறு தெரிவித்ததன் பேரில் அவர்கள் குதிரைகளை இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றனர்.

கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை, நீண்ட இடைவேளைக்குப் பிறகு திறக்கப்பட்ட அரசு மதுபானக் கடையில் ஆண்களுடன் வரிசையில் நின்று  தன்னுடைய கணவருக்காக 5 மது பாட்டில்களை வயதான ஒரு பெண்மணி வாங்கிச் சென்றார்.

மதுக்கடை வரிசையில் பெண் நின்றிருப்பது வியப்பூட்ட, கணவருக்காகத்தான் மது வாங்கிச் செல்கிறார் என்பது மக்கள் கவனத்தை ஈர்த்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com