புதுவை சட்டப்பேரவைத் தலைவராகிறார் பாஜக பொதுச்செயலர் ஆர்.செல்வம்

புதுவை சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச்செயலர் ஆர்.செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ளார். 
புதுவை சட்டப்பேரவைத் தலைவராகிறார் பாஜக பொதுச்செயலர் ஆர்.செல்வம்

புதுவை சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச்செயலர் ஆர்.செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

புதுவை மாநிலத்திற்கான 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது.  என். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.  இதனையடுத்து 15 வது சட்டப்பேரவை முதல் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது.

 அன்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
 தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆர். செல்வம், பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் திங்கள் கிழமை அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.  இதனை முதல்வர் என். ரங்கசாமி முன்மொழிந்தார்.

சட்டப்பேரவை பாஜக குழு தலைவர் ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தார். 
தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) பிற்பகல் 12 மணி வரை முடிவடைந்தது.

ஆளும் கட்சி கூட்டணி சார்பில் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் செல்வம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

 இதனால் சட்டப்பேரவைத் தலைவராக ஆர்.செல்வம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதனையடுத்து புதன்கிழமை காலை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் பேரவைத் தலைவர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பேரவைத் தலைவர் பதவி ஏற்பு நடைபெறும்.

முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர், பேரவைத் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்கள்.  இதனைத் தொடர்ந்து அமைச்சரவை பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், இரு கட்சிகளும் அதற்குரிய பெயர் பட்டியல் வழங்காமல் உள்ளதால், அமைச்சரவை பதவி ஏற்பு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com