காரைக்காலில் கரோனா தடுப்பூசித் திருவிழா தொடக்கம்

காரைக்காலில் நான்கு நாள்கள் நடைபெறக்கூடிய கரோனா தடுப்பூசித் திருவிழா புதன்கிழமை தொடங்கப்பட்டது.
காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில் கரோனா தடுப்பூசித் திருவிழாவை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா.
காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில் கரோனா தடுப்பூசித் திருவிழாவை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா.


காரைக்கால் : காரைக்காலில் நான்கு நாள்கள் நடைபெறக்கூடிய கரோனா தடுப்பூசித் திருவிழா புதன்கிழமை தொடங்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டத்தில், அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி அரசின் அறிவுறுத்தலின்படி,  18 வயதுக்கு மேற்பட்டோருக்காக தடுப்பூசித் திருவிழா கூடுதலாக நடத்தப்படுகிறது. காரைக்கால் மாவட்டத்தில் 16 முதல் 19-ஆம் தேதி வரை இத்திருவிழா புதிதாக 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்படுகிறது.

காரைக்கால் அம்மையார் கலையரங்கத்தில் இத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் அர்ஜூன் சர்மா தொடங்கிவைத்தார். நலவழித்துறை துணை இயக்குநர் கே.மோகன்ராஜ், கல்வித்துறை துணை இயக்குநர் கே.கோவிந்தராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி அ.அல்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நலவழித்துறையினர் இத்திருவிழா குறித்து கூறுகையில், தடுப்பூசித் திருவிழாவில் 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் ஆன்லைன் பதிவு செய்யாமல் ஆதார் உள்ளிட்ட புதுச்சேரி அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை ஏதாவது ஒன்றை மையத்துக்கு எடுத்துவந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 

ஒரு நாளைக்கு 14 சிறப்பு மையங்கள் வீதம் 4 நாள்களும் வெவ்வேறு இடங்களில் மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தப்படும். இந்த வாய்ப்பை காரைக்கால் பகுதியினர் தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டு, காரைக்கால் மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக உருவாகவும், ஒவ்வொருவரின் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள முன்வரவேண்டும் என்றனர்.

காரைக்கால் மாவட்டத்தில் வழக்கமாக தினமும் சுமார் ஆயிரம் பேர் வரை தடுப்பூசி செலுத்திக்கொண்டு வரும் நிலையில், இத்திருவிழா மேலும் அதிகமானோர் பயனடைய வாய்ப்புண்டாகும் என நலவழித்துறையினர் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com