திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
திருப்புவனத்தில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.
திருப்புவனத்தில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்புவனத்தில் நடந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.

திருப்புவனம் ஒன்றியம் மடப்புரம் ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த இரண்டாவது வார்டு உறுப்பினர் முத்திருளாயி. இவர் திருப்புவனம் வடகரை பகுதியில் வசித்து வருகிறார். 

முன்விரோதம் காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் பாண்டியம்மாள் இவரது மகன் ரவி, கணவர் நாகராஜன் மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் கும்பலாக வந்து முத்திருளாயி அவரது கணவர் ராமலிங்கம், மகன் பரந்தாமன் உறவினர்கள் என 5 பேரை அரிவாளால் வெட்டினர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்

திருப்புவனம் போலீசார் இந்த அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப் பதிந்து நான்கு பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர்.

இதற்கிடையில் இந்த வழக்கின் முக்கிய எதிரியை போலீசார் கைது செய்யாமல் இருப்பதை கண்டித்தும் அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் வடகரை பகுதியில் வசிக்கும் மக்கள், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் திருப்புவனம் காவல் நிலையத்திறகு திரண்டு வந்து சாலையில் நின்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்புவனம் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மக்களை சமாதானம் செய்து விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்ததையடுத்து போராட்டம் நடத்திய மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com