மேட்டூர் அணைக்கு வந்தது கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர்!

கர்நாடகம் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் புதன்கிழமைஅதிகாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. 
கர்நாடகம் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்
கர்நாடகம் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர்

கர்நாடகம் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் புதன்கிழமை அதிகாலை முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. 

கர்நாடகம் மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. மழையின் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ள காரணத்தால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளின் பாதுகாப்பு கருதி இரு அணைகளிலிருந்து வினாடிக்கு தலா 5 ஆயிரம் கனஅடி வீதம் மொத்தம் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம் அணைகளிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. 

கடந்த 19 -ஆம் தேதி முதல் காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை ஒஹேனக்கல்லை வந்தடைந்தது. புதன்கிழமை அதிகாலை 5 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது.

கர்நாடக அணைகளின் நீர் வரத்து காரணமாக மேட்டூர் அணைக்கு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 686 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர் வரத்து புதன்கிழமை காலை வினாடிக 2376 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கிய கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர்.

மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் செவ்வாய்க்கிழமை காலை 89.96 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் புதன்கிழமை காலை 89.36 அடியாக சரிந்தது. 

மேட்டூர் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வந்த நிலையில் கர்நாடக அணைகளின் நீர்வரத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கிய காவிரி நீர்

அணையின் நீர் இருப்பு 51.92  டி.எம்.சியாக உள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டால் காவிரி டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com