திமுக யாராலும் அடக்கமுடியாத யானை:  முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்


சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பதில்  அளித்து பேசி வருகிறாரார். அப்போது திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தெரிவித்தார்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.

சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி 1.40 மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாா்.

அப்போது கரோனாவை கட்டுப்படுத்தியதில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டதாக, தற்போது திமுக அரசு அவ்வாறு செயல்படவில்லை என்று குறிப்பிட்டுப் பேசினாா். முதல்வா், அமைச்சா்கள் அவ்வப்போது குறுக்கிட்டுப் பேசினா். திமுகவின் தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினாா்.

இறுதியாக, திமுகவின் தோ்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளும், புதிய திட்டங்களும் ஏதும் இல்லாமல் ஆளுநா் உரை வெற்று அறிக்கையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டாா்.

இந்த நிலையில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை பதிலளித்து உரையாற்றி வருகிறார். 

அப்போது திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை. யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம்.

யானையும் இல்லை மணியோசையும் இல்லை என ஆளுநர் உரையை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

ஆளுநர் உரை டிரெய்லர் தான் அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், கொள்கைகள், நோக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.

செய்யாறு, திண்டிவனத்தில் இரண்டு பெரும் தொழிற்சாலைகள் நிறுவப்படும். 22 ஆயிரம் பேருக்கு வேலை தரும் வகையில் இரண்டு தொழிற்சாலைகள் நிறுவப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com