முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
தமிழகத்தில் கோவில்களை திறக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 25th June 2021 12:52 PM | Last Updated : 25th June 2021 12:52 PM | அ+அ அ- |

தமிழகத்தில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி சிவன் கோவில் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணியினர்.
தமிழகத்தில் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி தூத்துக்குடியில் இந்து மக்கள் முன்னணி சார்பில் நூதன போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் கரோனா பெருந்தோற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விதிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களில் பக்தர்களின் வழிப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இதில், சில தளங்களுடன் காய்கறி, டீக்கடை, இறைச்சி, மட்டன் மற்றும் டாஸ்மாக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தநிலையில் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி இந்து முன்னணி சார்பில் பழமை வாய்ந்த சங்கர ராமேஸ்வரர் எனப்படும் சிவன் கோவில் முன்பு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணியினர் சிறுவருக்கு முருகன் வேடம் அணிந்து கோவில் முன்பு சூடம் காட்டி தேங்காய் உடைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக அரசு கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.