கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் தற்காலிமாக நிறுத்தம்: பிரேசில் அறிவிப்பு

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதை தற்காலிமாக நிறுத்தி உள்ளது பிரேசில்.
கோவாக்சின் தடுப்பூசி கொள்முதல் தற்காலிமாக நிறுத்தம்: பிரேசில் அறிவிப்பு



பிரேசிலியா: பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதை தற்காலிமாக நிறுத்தி உள்ளது பிரேசில்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாவுக்கு எதிரான முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் மத்தியில், பிரேசில் சுகாதார அமைச்சர் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் 20 கோடி கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கான ஒப்பந்தம் பாரத் பயோடெக் நிறுவனத்தால் 20 கோடி டோஸ் தடுப்பூசி இறக்குமதி செய்வதற்காக பிப்ரவரி மாதம் இரு தரப்பினரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின்படி, தடுப்பூசி அளவுகள் ஒருபோதும் பிரேசிலுக்கு அனுப்பப்படவில்லை, ஏனெனில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனம் (அன்விசா) தடுப்பூசிக்கான இறக்குமதிக்கான கோரிக்கைகளை மறுத்துள்ளதாக தகவல் வெளியானது.

இதனிடையே, கேவாக்சின் திறன் குறித்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் ஒப்பந்தம் சிக்கலுக்குள்ளான நிலையில்,  கோவாக்சின் தடுப்பூசில் கொள்முதலில் ஊழல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், கோவாக்சின் ஒப்பந்தம் ஏன் அவசரம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டது, ஒழுங்குமுறை அமைப்புகளின் அனுமதி நிலுவையில் இருக்கும் போது எப்படி ஒப்பந்தம் கையெழுத்தானது ஆக்யி கேள்விகள் எழுந்த நிலையில், புகார் தொடர்பான விசாரணையை பிரேசில் வழக்குரைஞர்கள் கையில் எடுத்துள்ளனர். 

கரோனா தொற்று பரவலை கையாண்ட விதம் குறித்து விசாரணை நடத்தி வரும் செனட் குழுவும் இந்த ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் கரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை தற்காலிமாக நிறுத்தி நிறுத்திவைப்பதாக பிரேசில் சுகாத அமைச்சர் தெரிவித்துள்ளார். 

மேலும், முதற்கட்ட ஆய்வுகளின்படி, கோவாக்சின் ஒப்பந்தம் தொடர்பாக ஊழல், முறைகேடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டுகளுக்கு இணங்கவும், விரிவான விசாரணை செய்யப்பட உள்ளதால் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com