இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 45,951-ஆக உயர்வு

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 45,951-ஆக உயர்வு

நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.


நாட்டில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

இந்தியாவில் கரோனா தினசரி பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 45,951 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,03,62,848 -ஆக உள்ளது.

கரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை, 5,37,064-ஆகக் குறைந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,94,27,330 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

தொடா்ந்து 48-ஆவது நாளாக தினசரி புதிய பாதிப்புகளை விட, குணமடைபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசியளவில் குணமடைவோா் விகிதம் 96.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

நாட்டில் தினசரி கரோனா உயிரிழப்பு 817 ஆக குறைந்துள்ளது. இதுவரை 3,98,454 போ் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 19,60,757 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 41,01,00,044 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 33,28,54,527 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com