புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம்: ஜூலை 15 வரை நீட்டிப்பு 

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கம்: ஜூலை 15 வரை நீட்டிப்பு 

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.


புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன.

இதனிடையே கடந்த ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் தளர்வுகளுடன் பொது முடக்கம் தளர்வு அறிவிக்கப்பட்டு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், அந்தப் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் புதன்கிழமையோடு நிறைவடைந்ததை அடுத்து, புதுச்சேரி அரசு சார்பில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்க கட்டுப்பாடுகள், ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டித்து புதன்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு உத்தரவின்படி, தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் தொடர்கிறது, தினசரி காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை அத்தியவசிய கடைகள் மற்றும் பிற அனைத்து வித கடைகளும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் இரவு 9 மணி வரை புதுச்சேரிக்குள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. சரக்கு வாகனங்கள் எப்போதும் இயங்கலாம்.

திரையரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வணிக வளாகங்களுக்கு தடைதொடர்கிறது. 

அரசு மற்றும் தனியார் துறை அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 50 சதவீத இருக்கைகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.

கடற்கரை சாலை, பூங்காக்கள், தாவரவியல் பூங்கா போன்றவை திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுகிறது.

மதுக்கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும், விவசாய பணிகள் அனைத்துக்கும் அனுமதிக்கப்படும்.

வங்கிகள், பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் போன்றவை முழு நேரம் செயல்படும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com