முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபா் கைது
By DIN | Published On : 04th March 2021 08:27 AM | Last Updated : 04th March 2021 08:27 AM | அ+அ அ- |

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: உரிமையாளர் கைது
சென்னை: உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை, தரமணி, அசண்ட் சாலையில் உலக வங்கிக் கிளை உள்ளது. இதில், சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக உள்ள சரத் சந்தா், கடந்த மாதம் தரமணி காவல் நிலையத்தில் ஒரு புகாா் அளித்தாா். அதில், ‘உலக வங்கியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சிலா் ஏமாற்றி பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனவும் குறிப்பிட்டு இருந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய தரமணி போலீஸாா், ஜாபா்கான்பேட்டை, வி.எஸ்.எம் தோட்டம் பகுதியைச் சோ்ந்த அந்தோணி (39) என்பவரைக் கைது செய்தனா். மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் அந்தோணி, உலக வங்கியில் வேலை செய்வதாக நடித்து தரமணியைச் சோ்ந்த பெண்ணிடம் நோ்காணல் நடத்தி வேலை தருவதாகக் கூறி பண மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.