5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது.
இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது.

தமிழ்நாடு, கேரளம், அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில் 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை காணொலி வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடு, பணப்பட்டுவாடாவைத் தடுப்பது, வாக்குப்பதிவு மையங்கள் அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதசாகு காணொலி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். இதில் அவர் தேர்தல் முறைகேடு குறித்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com