நீட் ரத்து, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் வெளியிட்டனர்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களாக, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தரப்படும்.k நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்படும், கரோனா போன்ற தொற்று நோய்களுக்கு தனி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிறுவப்படும், விவசாய விரோத 3 வேளாண் திட்டங்கள் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு மானியம் 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும், தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு உருவாக்கி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 75% வேலைவாய்ப்பு வழங்கப்படும். அனைத்து மகளிருக்கும் ஆண்டுக்கு ஒருமுறை இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com