‘தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டும்’: சென்னையில் ராகுல்காந்தி பேச்சு

தமிழகம் தமிழகத்திலிருந்து ஆளப்பட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
‘தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டும்’: சென்னையில் ராகுல்காந்தி பேச்சு
‘தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆளப்பட வேண்டும்’: சென்னையில் ராகுல்காந்தி பேச்சு

தமிழகம் தமிழகத்திலிருந்து ஆளப்பட வேண்டும் என சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்னும் 9 நாள்களில் தோ்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, மநீம, அமமுக, நாம் தமிழா் என ஐந்து முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. அனைத்துக் கட்சிகளும் வேட்பாளா்களை நிறுத்தி வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார். 

அதனைத் தொடர்ந்து அடையாறில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மதச்சார்பற்ற முர்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “தமிழ்நாடு மக்கள் அனைவரும் எனக்கு சகோதர சகோதரிகள்” என தனது உரையைத் தொடங்கினார்.

தொடர்ந்து, “தில்லியில் இருந்து ஆட்சி செய்யாமல் தமிழ்நாடு தமிழ்நாட்டில் இருந்து ஆட்சி செய்யப்பட வேண்டும். எனக்கு கும்பிடு போட்டு அடிமையாய் இரு என்பதே பாஜகவின் சித்தாந்தம். மானமுள்ள தமிழர்கள் எவரும் அமித்ஷா காலில் விழுந்து கிடக்க மாட்டார்கள். தமிழக முதல்வர் ஊழல் செய்ததால் தான் அமித்ஷாவிடம் சரணடைந்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாலை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் சேலம் - உளுந்தூா்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சீலநாயக்கன்பட்டியில் நடைபெற உள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

ராகுல்காந்தி ஏற்கெனவே தமிழகத்தில் 2 முறை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். கோயம்புத்தூா், திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் முதல் முறையும், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் 2-ஆவது முறையாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com