திருப்பூரில் மது பாட்டிலால் ஏற்பட்ட தகராறு: பனியன் தொழிலாளி கொலை

திருப்பூரில் மது பாட்டிலால் ஏற்பட்ட தகராறில் பனியன் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருப்பூர்: திருப்பூரில் மது பாட்டிலால் ஏற்பட்ட தகராறில் பனியன் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சின்ராசு (32). இவர் கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள பனியன் நிறுவனத்தில்
தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியில் நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த அறையில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், கடந்த 9 நாள்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த தேனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரும் இவரின் அறையில் தங்கியிருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், மதுக்கடைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை என்பதால், சின்ராசு தனது நண்பர் கண்ணன் என்பவருடன் சேர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மதுபாட்டில்களை வாங்கி அறையில் வைத்துள்ளார். இதன் பிறகு வெளியே சென்ற கண்ணன், சின்ராசுவை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு அறையில் வைத்திருக்கும் மதுபாட்டில்களை பத்திரமாக வைத்திருக்கும்படியும், யாராவது எடுத்து குடித்துவிட போகிறார்கள் என கூறியதாக தெரிகிறது. 

இதை அருகில் இருந்து கேட்ட ராஜ்குமார், சின்ராசுவிடம், மதுவை திருடிக் குடிக்கவா இங்கு வந்துள்ளேன் என கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாய்த்தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், அருகில் இருந்த கத்தியை எடுத்து சின்ராசு கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்ராசு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திமுருகன்பூண்டி காவல் துறையினர் சின்ராசுவின் சடலத்தை மீட்டு பிரோத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜ்குமாரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com