மணிமுத்தாறு அணையில் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் கார் சாகுபடி விவசாயத்திற்கு 105 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 
மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் கார் சாகுபடி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் செயற்பொறியாளர் அண்ணாதுரை.
மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் கார் சாகுபடி விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து வைத்தார் செயற்பொறியாளர் அண்ணாதுரை.


நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் மூலம் கார் சாகுபடி விவசாயத்திற்கு 105 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழக அரசிடம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதினர். 

இதையடுத்து தமிழக அரசு பெருங்கால் மூலம் கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அனுமதி அளித்ததையடுத்து அணையிலிருந்து சனிக்கிழமை மணிமுத்தாறு அணையிலிருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 

தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் அண்ணாதுரை பெருங்கால் மூலம் தண்ணீர் திறந்து வைத்தார். இதன்மூலம் சிங்கம்பட்டி அயன் சிங்கம்பட்டி வைராவிகுளம் தெற்கு பாப்பாங்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 2976 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. 

தொடர்ந்து  செயற்பொறியாளர் அண்ணாதுரை கூறியதாவது: மணிமுத்தாறு அணை பெருங்கல் பாசன விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று மணிமுத்தாறு அணை 80 அடி கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்றிலிருந்து 105 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். ஒரு நாளைக்கு 45 முதல் 75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் சுமார் 2796 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். பெருங்கல் பாசன விவசாயிகள் தேவைக்கேற்ப சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து கொள்ள கேட்டு கொள்ளப் படுகிறார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் தாமிரபரணி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் தங்கராஜன், உதவி பொறியாளர்கள் மகேஸ்வரன், சிவ கணேஷ் குமார், பெருங்கால் பாசன சங்க தலைவர் பாபநாசம், குடிமராமத்துப் பிரிவு சங்க தலைவர் ஆறுமுகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், பாசன சங்க நிர்வாகிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com