ஓபிஎஸ், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், ஜெயகுமார் தொடர்ந்து பின்னடைவு

தமிழகம் முழுவதும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 
ஓபிஎஸ், ராஜேந்திர பாலாஜி, பாண்டியராஜன், ஜெயகுமார் தொடர்ந்து பின்னடைவு


நாடே எதிர்பார்த்து காத்திருக்கும்  தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

தபால் வாக்குகள் எண்ணிக்கைகள் முடிவடைந்து மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போது வரை திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் 107 தொகுதியிலும், காங்கிரஸ் 11 தொகுதியிலும், மதிமுக 4 தொகுதியிலும், சிபிஎம், சிபிஐ தலா 2 தொகுதியிலும், விசிக 2 தொகுதியிலும், பிற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர். 

அதிமுக கூட்டணியில், அதிமுக 86 தொகுதியிலும், பாமக 10 தொகுதியிலும், பாஜக 5 தொகுதியிலும், பிற கட்சி 1 தொகுதியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. 

இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர்கள் பலரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். 

குறிப்பாக, போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,  இராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார், வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஒ.எஸ்.மணியனும், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்,   ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவடி தொகுதியில் போட்டியிட்ட  அமைச்சர் பாண்டியராஜன் உள்ளிட்ட பெரும்பாலான அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

அதைபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com