கரோனாவை எதிர்கொள்ள சில எளிய மருத்துவம்!

மிகவும் கடினமான இந்த காலகட்டத்தில் தொற்றைக் கையாள மிக எளிதான சில வழிகளைச் சொல்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான  டாக்டர் ஆர். மதன்.
கரோனாவை எதிர்கொள்ள சில எளிய மருத்துவம்!

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையால் நாடு முழுவதும் மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கின்றனர்.

மருத்துவமனைகளில் இடமின்றி மக்கள் தவிக்கின்றனர். உயிரிழப்புகள் உள்பட எண்ணற்ற துயரங்களைச் சந்திக்க நேரிடுகிறது.

இந்த நிலையில் மாற்று மருத்துவத்தின் மூலம் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என சித்த, ஹோமியோபதி, ஆயுர்வேத மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இவற்றால் தொற்றை வெற்றிகொள்ள முடியும் என்கிறார்கள் இவர்கள்.

மிகவும் கடினமான இந்த காலகட்டத்தில் தொற்றைக் கையாள மிக எளிதான சில வழிகளைச் சொல்கிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான  டாக்டர் ஆர். மதன்.

சில ஹோமியோ மருந்துகளைக் குறிப்பிடும் டாக்டர் மதன், இவை கிடைக்காத நிலையில் கரோனாவை எதிர்கொள்ளக் கூறும் சில வழிமுறைகள் மிக எளிதாகவும் நம்பிக்கையூட்டக் கூடியதாகவும் இருக்கின்றன.

கரோனாவை எதிர்கொள்ள என்ன மருத்துவம், என்ன பொருள்கள் தேவை?

இந்த கரோனா அனைவரிடமும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்றால் இல்லை. ஒரு குடும்பத்தில் 10 பேரில் இருவருக்கு கரோனா தொற்று பாசிட்டிவ் என்றும் இதர 8 பேருக்கு நெகட்டிவ் என்றும் வருகிறது. காரணம், அவரவருடைய நோய் எதிர்ப்பு சக்தி. அதாவது எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது கரோனா எளிதாக நம்மைத் தொற்றிக்கொள்ளும் என்கிறார். 

இதனால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் தொற்று  பாதிப்பிலிருந்து அல்லது உயிரிழப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். 

இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் அதிகமும் மெனக்கெடத் தேவையில்லை. வீட்டில் உள்ள உணவுப் பொருள்களையே பயன்படுத்தினால் போதுமானது. 

கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என முடிவுகள் வந்தவர்களும், இருமல், சளி, காய்ச்சல், மூச்சுவிடுவதில் சற்று சிரமம் உள்ளிட்ட லேசான அறிகுறிகளாக உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பெற என்ன செய்ய வேண்டும்?

முதலில் ஒரு முந்திரி பருப்பில் பாதியை மட்டும் உடைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதை வாயில் போட்டு அரை நிமிடத்திற்கு நன்றாக மெல்லுங்கள். பின்னர் ஒரு கப் தண்ணீர் அருந்த வேண்டும். அவ்வளவுதான்.

இதையே இன்னொரு விதமாகவும் இதைச் செய்யலாம்.

ஒரு முந்திரி பருப்பில் பாதியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நசுக்குங்கள். இனி, முந்திரி கலந்த இந்த நீரில் ஒரே ஒரு சொட்டு, ஒரு சொட்டுதான், நீரை எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர்  பாட்டிலை மூடி, முழுத் தண்ணீரிலும் அந்தச் சொட்டு கலக்குமாறு நன்றாக அடித்துக் குலுக்க வேண்டும். இப்போது அவரவர் அறிகுறிகளின் தன்மைக்கு ஏற்ப 15 அல்லது 30 நிமிடங்களுக்கு ஒருமுறை இந்தத் தண்ணீரில் ஒரு சிப் அருந்திக் கொண்டிருக்க  வேண்டும். இது போதுமானது.

கரோனா தொடக்க நிலை என்று கருதுவோர் முந்திரியை இவ்வாறு பயன்படுத்தினால் ஒருநாளில் உடலில் ரத்த பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும்.

கரோனா அறிகுறிகள் சற்று தீவிரமாக இருந்தால்... ஆக்சிஜன் அளவு சரியாக இருந்தாலும் மூச்சுத் திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

நாம் வழக்கமாகச் சமையலுக்குப் பயன்படுத்தும் கேரட்டில் ஒரு சிறு துண்டை, சிறு துண்டுதான், வெட்டியெடுத்து ஒரு கப், அதாவது 250 மிலி நீரில் போட்டு வேகவைத்து அந்த நீரை எடுத்துக்கொள்ளவும். இந்த நீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கால் டம்ளர் வீதம் அருந்திவர வேண்டும். 

சிறியவர்கள், நடுத்தர வயதினர் சிறு துண்டு கேரட்டை வாயில் போட்டு நன்றாக மென்று பின் அத்துடன் ஒரு அரை தம்ளர் தண்ணீரை அருந்தலாம். 

கரோனா அறிகுறிகளையும் கடந்து, நுரையீரலில் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை என்றால் என்ன செய்ய வேண்டும்...

நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் கசகசாவை இரண்டு சிட்டிகை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நசுக்க வேண்டும். இனி அந்தத் தண்ணீரிலிருந்து ஒரு சொட்டு, ஒரே ஒரு சொட்டு நீரை மட்டும் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து அரை நிமிடம், அடித்து நன்றாக குலுக்க வேண்டும். பின்னர், தேவைக்கேற்ப அவ்வப்போது குடித்துவர வேண்டும்.

இவையன்றி, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க என்ன செய்யலாம்...

சாதாரண அடுப்புக் கரித்துண்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறு கரித்துண்டுடன் ஒரு ஸ்பூன் நீர் சேர்த்து நசுக்கிக்கொள்ளவும். இதிலிருந்து ஒரு சொட்டு நீரை, ஒரே ஒரு சொட்டுதான், எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கலந்து குலுக்கவும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு முறை ஒரு மிடறு இந்தத் தண்ணீரை அருந்திவந்தால் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் உடலில் ஆக்சிஜன் செறிவு 86/87 லிருந்தாலும் 91-92 என்ற அளவுக்கு மாறும்.

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, தற்காத்துக் கொள்ள ஹோமியோ மருத்துவத்தின் அடிப்படையில் டாக்டர் மதன் கூறும் சில எளிய வழிகள் இவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com