ஆப்பக்கூடலில் கரோனாவுக்கு கணவன் பலி: பாதிக்கப்பட்ட மனைவி தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 20th May 2021 01:29 PM | Last Updated : 20th May 2021 01:29 PM | அ+அ அ- |

திருப்பூர் அருகே தாய், மகன், மகள் தற்கொலை
பவானி: பவானி அருகே கரோனா பாதிப்பால் கணவன் உயிரிழந்த நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்ட மனைவியும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல், நான்குசாலை பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரது மனைவி சம்தாவதி (58). இவரும், ஆப்பக்கூடலில் சைக்கிள் ஸ்டேண்ட் வைத்து நடத்தி வந்தனர். இவரது மகன் யுவராஜ், கோவையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், செங்கோட்டையன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி கடந்த 14-ஆம் தேதி செங்கோட்டையன் உயிரிழந்தார். கோவையிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெற்ற நிலையில், 18-ஆம் தேதி சம்தாவதி ஆப்பக்கூடல் திரும்பினார்.
இங்கு, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது சம்தாவதியும் கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், மனமுடைந்த சம்தாவதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.