பொது முடக்கம் தேனி மாவட்டத்திலிருந்து  கேரள சாலைகள் அடைப்பு

தேனி மாவட்டத்தை  இணைக்கும் கேரள எல்லையான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலை சோதனை சாவடி.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலை சோதனை சாவடி.


கம்பம்: தேனி மாவட்டத்தை  இணைக்கும் கேரள எல்லையான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைச்சாலைகள் பொதுமுடக்கத்தின் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது.

தேனி மாவட்டத்தின் அருகே உள்ள கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திற்கு செல்கின்ற மலைச்சாலைகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலை சாலைகள் பொது முடக்கத்தை முன்னிட்டு மூடப்பட்டது.

எல்லைப் பகுதியில் உள்ள தமிழக-கேரள சோதனைச் சாவடிகளில் காவல் பலப்படுத்தப்பட்டு செல்கின்ற வாகனங்களை கண்காணித்தனர்.

குமுளி பிரதானப் சாலை ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் காரணமாக வெறிச்சோடி உள்ளது.

அத்தியாவசிய பொருள்களான பலசரக்கு காய்கறிகள் பால் வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதிக்கப்பட்டது.

அந்த வாகனங்களையும் இரண்டு மாநில சோதனைச்சாவடி போலீசார் சோதனை செய்து அனுப்பி வைத்தனர்.

தேனி மாவட்டம் அருகே உள்ள இடுக்கி மாவட்ட பகுதிகளான குமுளி, வண்டிப்பெரியார், பீர்மேடு, உடும்பன்சோலை, நெடுங்கண்டம் கட்டப்பனை உள்ளிட்ட பகுதிகளில்  கார், ஆட்டோ, வேன் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.  பலசரக்கு மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. பொதுமக்கள், ஏலக்காய் தோட்ட தொழிலாளர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com