புதுச்சேரி துணைநிலை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 33 இடங்களில் 30 இடங்களுக்கானத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பான்மை இடங்களை பெற்று என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. 

இந்நிலையில் மாநில சட்டப்பேரவையில் பாஜக 6 இடங்களைப் பெற்றிருந்த நிலையில் மேலும் 3 நியமன எம்எல்ஏக்களாக பாஜகவினர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பாஜகவின் பலம் 9 ஆக இருந்தது.

மேலும் இதுவரை 2 சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவளித்த நிலையில் தற்போது திருபுவனை சட்டப்பேரவை உறுப்பினர் அங்காளன் ஆதரவளித்துள்ள நிலையில் பாஜகவின் பலம்  12ஆக அதிகரித்துள்ளது. 

அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசியலில் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் 6 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், 3 பாஜக நியமன சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேட்சை சட்டப்பேரவை உறுப்பினர்கள் புதன்கிழமை மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனை சந்தித்து பேசினர். 

ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில் துணை நிலை ஆளுநருடன் அக்கட்சியினர் சந்தித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com