காதலியை மணந்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
போரிஸ் ஜான்சன்-ஹேரி சைமண்ட்ஸ்
போரிஸ் ஜான்சன்-ஹேரி சைமண்ட்ஸ்



இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(56) 2018 -ஆம் ஆண்டு முதல் தனது காதலியான ஹேரி சைமண்ட்ஸ்(33) உடன் திருமணம் செய்யாமலே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு கடந்த ஆண்டு குழந்தை ஒன்று பிறந்தது. இதனைத்தொடர்ந்து தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தனர். 

இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர். 

லண்டனில் உள்ள ஒரு கிருஸ்தவ தேவாலயத்தில் இந்த ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து போரிஸ் ஜான்சன்- ஹேரி சைமண்ட்ஸ் தம்பதியருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

போரிஸ் ஜான்சனுக்கு இது மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com