இருசக்கர வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்காவிட்டால் கண்டெய்னர் லாரிகள் ஓடாது: துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு 

சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாளும் டிரெய்லர் லாரி ஊழியர்களுக்கு இரு சக்கர வாகன இ-பாஸ் வழங்க அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருவொற்றியூர்:  சென்னை துறைமுகத்தில் சரக்கு பெட்டகம் கையாளும் டிரெய்லர் லாரி ஊழியர்களுக்கு இரு சக்கர வாகன இ-பாஸ் வழங்க அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 

கரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை துறைமுகத்தில் 100 சதவீதம் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர் லாரிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அலுவலக பணிக்கு இரு சக்கர வாகனத்திற்க்கு இ-பாஸ் வழங்க அனைத்து டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசிய போது: 

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை எங்களுக்கு இ-பாஸ் அனுமதியளக்கப்பட்டிருந்து. தற்போது உள்ள தளர்வுகளற்ற முழுஊரடங்கால் எங்களுடைய இ-பாஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதுமேலும் ஊழியர்களை காரில் சென்று பணி செய்யுமாறு தமிழக அரசு  கூறுகிறது.

நாங்கள் அனைவரும் ஒரு லாரிகளை வைத்து சிறு தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு கார்கள் இல்லை என்பதால் இரு சக்கர வாகனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

சென்னை துறைமுகம் முழுவீச்சில் செயல்படுவதால் நாங்கள் கண்டெய்னர் லாரிகளை இயக்க ஓட்டுநர்களிடம் ஆவணம்  வழங்க வேண்டியுள்ளது. மேலும் இ-பாஸ் அனுமதி பெற துறைமுக நிர்வாகத்திற்கு பல முறை மெயில் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 

எனவே எங்களுடைய பணியை செய்ய எங்கள் பணியாளர்களுக்கு முறையான இபாஸ் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நாளை முதல் கண்டைனர் லாரிகளை இயக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com