விஏஓ சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் ரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில்  நவ.20 ஆம் தேதி  நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின்  மாநில  பொதுக் குழு அவசரக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஏஓ சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் ரத்து
விஏஓ சங்க மாநில பொதுக் குழுக் கூட்டம் ரத்து

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில்  நவ.20 ஆம் தேதி  நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின்  மாநில  பொதுக் குழு அவசரக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில, மாவட்ட, வட்டார,  சங்க நிர்வாகிகளின்  அவசரக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநில தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 

20ஆம் தேதி கோயம்புத்தூர் வால்பாறையில் நடைபெறுவதாக இருந்த சங்க மாநில பொதுக் குழு அவசரக் கூட்டம் மழை வெள்ள தேர்தல் பணிகளில் தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள்  கலந்து கொண்டிருப்பதால் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் நடந்த மாநில தேர்தல் வழியாக அமைக்கப்பட்ட சங்கத்தின் விதிமுறைகளை மீறி மாற்று சங்கத்தினர் சிலர் தாங்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கம் என்று பேட்டிகளும், பத்திரிகைச் செய்திகளும் கொடுத்து வருகிறார்கள். அவர்கள்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  “கடந்த 2018ஆம் ஆண்டு  டிசம்பர் மாதத்தில் ஜாக்டோ- ஜியோ அமைப்புடன் சேர்ந்து போராடிய நிர்வாக அலுவலர்களுக்குரிய 18 நாள் சம்பளத்தை அரசு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான  கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்தியும், பணியாற்றும் இடத்தில் கழிப்பறை உள்ளிட்ட  அடிப்படை வசதிகளுடன் கூடிய அலுவலக கட்டிடங்களை உறுதிப்படுத்த வேண்டும்.

அரசின் சான்றுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான  இணைய வழி தளத்திற்கான வசதிகளையும், அதற்குரிய செலவினத் தொகையையும் அரசு  வழங்க வேண்டும் எனவும் அவர்  தெரிவித்தார்.

உடன் நாகை மாவட்ட தலைவர் ரெங்கநாதன், மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலகுமார், வேதாரண்யம் வட்டச் செயலாளர் மகேந்திரன், நிர்வாகி  கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com