3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
By DIN | Published On : 26th November 2021 06:42 PM | Last Updated : 26th November 2021 06:42 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடலூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகிலுள்ள சி.புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் வீ.அக்னிவீரன் (52). இவர் கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதையும் படிக்க | திருப்பூர்: மூலனூர் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று, நீதிபதி எம்.எழிலரசி தீர்ப்பு வழங்கினார். அதில், சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட மீனவர் அக்னிவீரனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க | டிச.15 முதல் வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானச் சேவை: மத்திய அரசு
இதுகுறித்து அரசு தரப்பு வழக்குரைஞர் எஸ்.கலாசெல்வி கூறியதாவது, நீதிபதி தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சமூகநலத்துறை நலவாழ்வு நிதியில் இருந்து ரூ.5 லட்சத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பெற்று வழங்க வேண்டுமெனவும் கூறியிருப்பதாக தெரிவித்தார்.