முகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்
தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்.12) 40,000 கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள்
By DIN | Published On : 11th September 2021 09:25 PM | Last Updated : 11th September 2021 09:25 PM | அ+அ அ- |

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
கரோனா பரவலைத் தடுக்க செப்டம்பர் 12ஆம் தேதி மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் கரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமெடுத்துள்ளது.
இதையும் படிக்க | ஆந்திரத்தில் மேலும் 1,145 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்த மாநிலம் முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி 40 ஆயிரம் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
18 லட்சம் மக்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்த சிறப்பு முகாம்கள் உதவிகரமாக இருக்கும் எனத் தெரிவித்த அமைச்சர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.