புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆலோசனை

புதுச்சேரி முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை காலை தொடங்க
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு குறித்து முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர்.


புதுச்சேரி முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் மாநில தலைவர் சுப்பிரமணியன், திமுக அமைப்பாளர் ஆர். சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராஜாங்கம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

புதுவை உள்ளாட்சித் தேர்தலில் 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள பதவிகளில் போட்டியிடுவது தொடர்பாக, இடப்பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com