திருத்தணி முருகன் கோயிலில் கட்டணமில்லா முடி காணிக்கை திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்து திட்டத்தை தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்து அறநிலையத்துறை மானியக்கோரிக்கையின்போது திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் முடிக்காணிக்கை செலுத்துவதற்கு கட்டணம் இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். இத்திட்டம் 5.9.21 முதல் நடைமுறைபடுத்தப்பட்டது.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் இந்த திட்டத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு பக்தர்களுக்கு முடி காணிக்கைக்கு கட்டணம் இல்லை என்ற கணினி மயமாக்கப்பட்ட திட்டத்தினை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகையில், வியாழக்கிழமை (செப்.30) முதல் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்கள் வரிசையில் வந்து முடி காணிக்கை செலுத்தும் இடத்தின் அருகில் உள்ள மின்னனு இயந்திரத்திற்கு முன் நின்று 89399 71540 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் அவருடையை புகைப்படத்துடன் கூடிய கட்டணமில்லா முடிக்காணிக்கை அனுமதிச்சீட்டு அவ்விடத்திலேயே திருக்கோயில் பணியாளர்களால் வழங்கப்படும்.

கட்டணமில்லா முடிக்காணிக்கை அனுமதி சீட்டினை சிகை நீக்கும் நாவிதர் பணியாளரிடம் வழங்கினால் அவர்கள் மேற்படி அனுமதி சீட்டினை பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு சிகையை நீக்குவார்கள். 

முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் சூடான நீரில் குளிப்பதற்கு வசதியாக அருகிலேயே சுடுநீர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. 

இத்திருக்கோயிலில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்படவுள்ள நவீன திருமண மண்டபத்திற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும். மேலும் ரூ.50 லட்சம் செலவில் நாதஸ்வரம், தவில் இசை பயிற்சி பள்ளி, ரூ.5 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு திருக்கோயில்களுக்கான நிர்வாக பயிற்சி பள்ளிக்கான, கட்டடம் அமையவுள்ள இடத்தினை பார்வையிடும் பணியினை விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார். 

இந்த ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், திருத்தணி முருகன் கோயிலின் தக்கார், (பொறுப்பு) ரமணி, திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.சந்திரன், மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.பூபதி, நகர கழக செயலாளர் வினோத்குமார், வழக்குரைஞர் ஜெ.ஜெ.கிஷோர்ரெட்டி,  முன்னாள் முருகன் கோயில் அறங்காவலர் மு.நாகன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com