தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் 

தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின் 

தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழககத்தின் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, தமிழ்நாட்டில் அமைந்துள்ள 'திராவிட மாடல்' ஆட்சியை எந்தக் காலத்திலும் - எந்தச் சூழ்நிலையிலும் - எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் திராவிடப் பேரியக்கக் கொள்கைகளின் வழிநின்று நான் நடத்திச் செல்வேன். 

இந்த ‘திராவிட மாடல்’ ஆட்சியானது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல - இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியாக அமைந்திருக்கிறது. நம்முடைய சமூகநீதியை – நாம் பேசிய மாநில சுயாட்சியை, இன்றைக்கு வட மாநிலத் தலைவர்கள், பல முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விழிப்படைந்து வரும் வடமாநில பொதுமக்களும் முழங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இதுதான் நமது நமக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய சாதனை!

திராவிடச் சிந்தனை இன்று இந்தியா முழுவதும் பரவுவது சிலருக்கு கசப்பாக இருக்கிறது. ‘திராவிட மாடல்’ என்று சொல்வது சிலருக்கு எரிச்சலைத் தருகிறது. பெரியார் பெயரை அடிக்கடி சொல்வதைப் பார்த்து அவர்களுக்கு கோபம் வருகிறது. வெறுப்பைச் சுமந்து வாழ்பவர்களுக்கு, திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் ஒட்டி இருப்பது சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது. கருப்பையும் சிவப்பையும் யாராலும் பிரிக்க முடியாது!

பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகிய மூவரையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாம். தனித்தனி இயக்கமாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒரே இயக்கத்தை - ஒரே கொள்கையைச் சேர்ந்தவர்கள்தான். அதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது.

தமிழினத்தை கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் முன்னேற்றத்தில், சமூக மேம்பாட்டில் வளர்த்தெடுப்பது ஒன்றையே இலக்காகக் கொண்டு நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். தமிழினம் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் நம்மை எதிர்க்கிறார்கள். இது, பல்லாயிரம் ஆண்டு காலப் பகைமையாக இருந்தாலும் -எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சமத்துவத்தை அடையும் வரை நமது கொள்கையில் வெல்லும் வரை நாம் உறுதியாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com