'புதுவையில் 1 - 9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி'
By DIN | Published On : 27th April 2022 09:05 PM | Last Updated : 27th April 2022 09:05 PM | அ+அ அ- |

கோப்புப் படம்
புதுச்சேரியில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறாததால், அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் காரணமாக தமிழகம் உள்பட புதுச்சேரியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. கரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்ததன் விளைவாக இந்த ஆண்டு ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்படன.
விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்ட நிலையில், எஞ்சியவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.