கரோனா பாதித்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த உணவா?: கண்ணீர் விடும் வீராங்கனை

சீனாவில் கரோனா பாதித்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா பாதித்த விளையாட்டு வீரர்களுக்கு இந்த உணவா?: கண்ணீர் விடும் வீராங்கனை

சீனாவில் கரோனா பாதித்த வெளிநாட்டு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரோனா பாதிப்பில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள ரஷியாவைச் சேர்ந்த பனிச்சறுக்கு துப்பாக்கிச்சூடு வீராங்கனை வலிரீயா வாஸ்நெத்சோவா தனக்கு வழங்கப்படும் மோசமான உணவை புகைப்படம் எடுத்து பகிந்துள்ளார். சீனாவில் இந்த செயல் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பெய்ஜிங்கில் குவிந்துள்ளனர். 

கரோனா பரவல் முதல்முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடப்பதால், கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அந்தவகையில், கரோனா பாதித்த விளையாட்டு வீரர்களைத் தனிமைப்படுத்தி கண்காணித்தும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பரிசோதனையின்போது ரஷிய வீரான்கனை வலிரீயா வாஸ்நெத்சோவாவுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரை தனிமைப்படுத்தி சீன குளிர்கால ஒலிம்பிக் தொடரின் நிர்வாகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை குறித்து அந்த வீராங்கனை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வழங்கப்பட்ட உணவின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ''கரோனா பாதித்த வெளிநாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுமுறை இதுதானா?. கடந்த 5 நாள்களாக காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் இதுதான் வழங்கப்படுகிறது. ஏற்கெனவே எனது எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிகின்றன. சரியான உணவு இல்லாததால், சோர்வாகவும் உணர்கிறேன். விளையாட்டு வீரர்களுக்கான உணவுமுறை வேறு. இதனை நிர்வாகம் செய்யவில்லை'' என்று குற்றம் சாட்டியுள்ளார். 

விளையாட்டு வீராங்கனை வாஸ்நெத்சோவாவுக்கு பாஸ்தா, சிறிதளவு உருளைக் கிழங்கு, ஆரஞ்சு சாஸ், எலும்புடன் கூடிய கறி இவை மட்டுமே மூன்று வேளையும் வழங்கப்பட்டதாக பகிர்ந்துள்ளார்.

இதற்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய ரஷிய செய்தித்தொடர்பாளர் செர்கெய் அவெர்யானொவ், வீராங்கனைக்கு உரிய உணவு வழங்குவதை உறுதி செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில், உடற்பயிற்சி உபகரணங்களும் அவர்களது அறையில் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com