உங்கள் ஒரு ஓட்டு "குற்றமில்லாத, அச்சமற்ற, கலவரமில்லாத" மாநிலத்திற்கான உறுதியை வலுப்படுத்தும்: ஆதித்யநாத்

"குற்றம் இல்லாத, அச்சம் இல்லாத, கலவரம் இல்லாத" மாநிலத்திற்கான பாஜக உறுதியை வலுப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். 
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

லக்னௌ: உங்கள் ஒரு ஓட்டு "குற்றம் இல்லாத, அச்சம் இல்லாத, கலவரம் இல்லாத" மாநிலத்திற்கான பாஜக உறுதியை வலுப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் வாக்களிக்குமாறு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கேட்டுக் கொண்டுள்ளார். 

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வியாழக்கிழமை (பிப்.10) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைகிறது.

403 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட  உத்தர பிரதேசத்தில் பேரவைத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தங்களின் வாக்கை பதிவு செய்ய மக்கள் வரிசையில் நிற்கும் நிலையில், வாக்காளர்களின் பங்களிப்பைப் பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று காலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், வாக்காளர்களின் பங்களிப்பு இல்லாமல் இந்த வாக்குப்பதிவு சடங்கு சம்பிரதாயம் முழுமையடையாது என்றும், உங்கள் ஒரு வாக்கு "குற்றமற்ற, அச்சமற்ற, கலவரமில்லாத" உத்தர பிரதேசத்திற்கான பாஜக உறுதியை வலுப்படுத்தும் விதமாக வாக்காளர்கள் தங்களை வாக்கை பதிவு செய்ய வேண்டும். வாக்குப் பதிவு நாளில் 'முதலில் வாக்களியுங்கள்' பிறகு பிற வேலையை செய்யுங்கள்" என்று வாக்காளர்களை முதல்வர் யோகி ஆதித்யநாத்  கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com