தமிழகத்தில் புதிதாக 2,731 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 04th January 2022 08:21 PM | Last Updated : 04th January 2022 08:21 PM | அ+அ அ- |

தமிழகத்தில் புதிதாக 2,731 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் புதிதாக 2,731 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 2,731 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,798 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மேலும் 674 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதையும் படிக்க | துபை லாட்டரியில் ரூ.50 கோடி வென்ற கேரள ஓட்டுநர்
இதுவரை மொத்தம் 27,06,370 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 36,805 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 12,412 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னையில் அதிகபட்சமாக 1,489 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 290 பேருக்கும், கோவையில் 120 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.