கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
By DIN | Published On : 04th January 2022 10:20 PM | Last Updated : 04th January 2022 10:20 PM | அ+அ அ- |

கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, படுக்கை வசதிகளை உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க | காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா தொற்று
ஆய்வின்போது படுக்கை வசதிகள், தேவையான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.